குரு ஓரையில் ஒற்றுமையை பலப்படுத்தும் ஜோடி தீபம்!

 

குரு ஓரையில் ஒற்றுமையை பலப்படுத்தும் ஜோடி தீபம்!

குரு ஓரையில் ஒற்றுமையை பலப்படுத்தும் ஜோடி தீபம் ஏற்றி வழிப்பட்டால், தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். குரு ஓரையில் குரு பகவானை வழிபடுவது நல்லது. எந்தநேரம் வேண்டுமானாலும் குருபகவானை வழிபாடு செய்யலாம். மனித வாழ்விற்கு உண்டான அனைத்து ஏற்றங்களையும், நன்மைகளையும், செல்வங்களையும் வாரி வழங்கக் கூடியவர் என்பதால் குரு பகவானுக்கு நவக்கிரகங்களில் தனிச் சிறப்பு உண்டு. இவரை சுபகிரகம் என்றே அழைப்பர்.

குரு ஓரையில் ஒற்றுமையை பலப்படுத்தும் ஜோடி தீபம்!


ஜோதிட சாஸ்திரப்படி, சில துன்பங்கள் தரக்கூடிய கிரகங்களை குருவின் பார்வை பாட்டாலே, அவரின் துன்பங்கள் விலகி நன்மை பெருகும். நற்பலன்கள் அதிகரிக்கும் என்கின்றன. அதனால், குருபகவானுக்குரிய் வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் குருவை வழிபட்டு பரிகாரங்கள் செய்தால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். குருவுக்கு உகந்த மஞ்சள் வண்ண மலரால் அல்லது மணமுள்ள முல்லைப் பூவால் அலங்கரித்து, தீபம் ஏற்றி வழிபட்டால் நெஞ்சம் மகிழும் வாழ்க்கை நமக்கு அமையும்.

குரு ஓரையில் ஒற்றுமையை பலப்படுத்தும் ஜோடி தீபம்!

எந்த நேரமும் கீரியும் பாம்புமாக சண்டைப் போட்டுக்கொள்ளும் கணவன்- மனைவி சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையாக இரும்க குரு சன்னிதியில் ஜோடி தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. ஜோடி தீபம் ஏற்றும்போது நெருக்கமாக நின்று தீபம் ஏற்றினால் ஒற்றுமை பலப்படும். குரு பகவானை பார்த்தப்படி நெய் தீபம் ஏற்றி வணங்கினாலும் நல்லது. வயதுக்கு ஏற்றாற்போல் விளக்கு ஏற்றலாம். ‘சனியைச் சாய்வாய் நின்று கும்பிடு’ என்பதைப் போல ‘குருவை நேராய் நின்று கும்பிடு’ என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. குருவுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கலோ அல்லது ஏதாவது ஒரு இனிப்பு பலகாரம் வைத்து வழிபடலாம்.

அந்த பிரசாதத்தை நாமே உபயோகிப்பது நல்லது. குரு பகவானைப் போற்றிப்பாடும் குரு பகவானுக்குரிய ஸ்லோகம்! தேனாம்ச ரஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்! புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!! குருவை வழிபடும்போது கண்மூடி மனதை ஒருநிலைப்படுத்தி இந்த ஸ்லோகத்தை சொல்வது ரொம்ப நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் ஆலமர்செல்வன் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். 16திரி போட்டு விளக்கு ஏற்றுவது நல்லது.