திருமாவளவனால் தமிழகத்தில்… அமிதாப்பச்சனால் இந்தியா முழுவதும்…

 

திருமாவளவனால் தமிழகத்தில்…  அமிதாப்பச்சனால் இந்தியா முழுவதும்…

மனு தர்ம சாஸ்திரத்தில் உள்ள சில பக்கங்களை பற்றி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சர்ச்சையில் சிக்கி , பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கபட்டு வந்தார். பதிலுக்கு திருமாவளவனும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றார்.

திருமாவளவனால் தமிழகத்தில்…  அமிதாப்பச்சனால் இந்தியா முழுவதும்…


இங்கே திருமாளவனை போல் மும்பையில் மனு தர்ம சாஸ்திரம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

சோனி தொலைக்காட்சியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் 12வது நிகழ்ச்சிஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 30ம் தேதி நடந்த ஒளிபரப்பில், 25.12.1927ல் டாக்டர் அம்தேத்கரும், அவரது ஆதரவாளர்களூம் புத்தகத்தின் நகல்களை கொளுத்தினார்கள். அது எந்த புத்தகம் என்றூ கேட்டு, விஷ்ணு புராணம், பகவத் கீதை, ரிக்வேதம், மனு ஸ்மிருதி என்று நான்கை காட்டி,அதில் சரியான விடை என்று ‘மனுஸ்மிருதி’யை சொல்லப்பட்டது.

மேலும், ’’சாதி பாகுபாடு, தீண்டாமையை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்திய பண்டைய இந்து நூலான மனு ஸ்மிருதிக்கு அம்பேத்கர் கண்டனம் தெரிவித்து, அதன் பிரதிகளை எரித்தார்.’’என்று அந்த சம்பவத்திற்கு அமிதாப்பச்சன் விளக்கமும் தந்தார்.

இது சர்ச்சை ஆகி, அமிதாப்பச்சன் மீதும், சோனி நிறுவனம் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருமாவளவனால் தமிழத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் மனுஸ்மிருதி, அமிதாப்பச்சனால் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது பண்டைய இந்து நூல்.