ஈரோடு: காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு – மலைகிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

ஈரோடு: காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு – மலைகிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையால், காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஈரோடு: காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு – மலைகிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. 42 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் குன்றி மற்றும் விளாங்கோம்பை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் காட்டாறுகள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணையை வந்தடைகிறது.

ஈரோடு: காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு – மலைகிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

இந்நிலையில், இன்று அதிகாலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த
கனமழையினால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவு நீர் வரத் தொடங்கி உள்ளது. இதனால் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4 மணிநேரத்தில் 2 அடிகள் உயர்ந்து, 34 அடியாக உள்ளது. இதனிடையே, காட்டாற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால், விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் ஆகிய இரு மலைக்கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியிலேயே முடங்கி உள்ளனர்.

ஈரோடு: காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு – மலைகிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

இவ்விரு கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள், மருத்துவம் மற்றும் அந்தியாவசிய தேவைக்கு 8 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் கால்நடையாக பயணித்து, குண்டேரிப்பள்ளம் அணைக்கு வரும் 4 காட்டாறுகளை கடந்தே வினோபா நகர் மற்றும் கொங்கர் பாளையம் பகுதிக்கு வர வேண்டியுள்ள சூழ்நிலையில், மழைக்காலங்களில் கிராமங்களை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவ்விரு கிராமங்களுக்கும் சாலை மற்றும் காட்டாறுகளில் மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்ட நிலையில், இன்று வரை பணிகள் தொடங்கப்பட வில்லை என்று தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், தமிழக அரசு விரைந்து இப்பகுதியில் சாலை அமைக்கவும், 4 காட்டாறுகளில் மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.