திருச்சி: “கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை” – காவல் ஆணையர்

திருச்சி: “கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை” – காவல் ஆணையர்

கொரோனா பரவலை தடுத்து தீபாவளியை சிறப்புடன் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் லோகநாதன்
கேட்டுக்கொண்டார். திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் அமைக்கப்பட்ட தற்காலிக காவல் நிலையத்தை இன்று திறந்துவைத்து பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

திருச்சி: “கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை” – காவல் ஆணையர்

மேலும், திருச்சியில் தீபாவளிக்கென புறக்காவல் நிலையம் அமைத்து, 8 கண்காணிப்பு கோபுரங்களும், குற்ற நிகழ்வுகளை தடுக்கவும், சமூக இடைவெளி இல்லாமல் இருப்பதை கண்டறிந்து முகக் கவசம் அணிவதை
உறுதிப்படுத்த 127 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருச்சி: “கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை” – காவல் ஆணையர்

வணிக வளாகங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாகவும் காவல் ஆணையர் ஜெயராம் தெரிவித்தார். மேலும், முக கவசங்கள் அணியாதவர்களுக்கு, இலவசமாக முககவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.