தனிமைப் படுத்திக்கொண்டார் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

 

தனிமைப் படுத்திக்கொண்டார் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

ஓராண்டை நெருங்கிவிட்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கிய கொரோனா அச்சத்தின் உச்சத்தில் இருந்து இந்த டிசம்பர் நெருக்கத்தில்தான் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது உலகம்.

கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் பலியாகி கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவது பேரழிவுக்கு வழிவகுத்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்டெட்ரோஸ் அதானம் கேப்ரேயேசூஸ்

தனிமைப் படுத்திக்கொண்டார் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

கொரோனா தாக்கம் உச்சத்திலிருந்த ஜூலை மாதத்தில், எதிர்காலத்தில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று எச்சரித்து, உலகையே கவலைப்பட வைத்தவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரேயேசூஸ். ஆனாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கொரோனாவில் இருந்து உலகம் எப்படி மீழ்வது குறித்தும் இவரது தலைமையிலான குழு, உலகுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில், டெட்ரோஸ் அதானம் கேப்ரேயேசூஸும் கொரோனா தொற்றினால் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர், ‘’என்னுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து உலக சுகாதார அமைப்பின் வழிமுறைகளின்படி என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை’’என்று தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும், ‘’உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை கடுமையாக்கினால்தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும். நானும் சுகாதார அமைப்பும் உலக மக்களை காக்க பாடுபடுவோம். வீட்டில் இருந்தே நான் வேலை செய்து வருகின்றேன்’’என்றும் தெரிவித்திருக்கிறார்.