Home இந்தியா ‘’அங்கெல்லாம் வேணாம்... யாராவது பார்த்துடுவாங்க; ரகசியமா இருந்துட்டு வர்ற மாதிரி....’’இளைஞர்களை மடக்கும் இளம்பெண் ஆர்யா

‘’அங்கெல்லாம் வேணாம்… யாராவது பார்த்துடுவாங்க; ரகசியமா இருந்துட்டு வர்ற மாதிரி….’’இளைஞர்களை மடக்கும் இளம்பெண் ஆர்யா

கேரளாவில் கொத்தமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் ஆர்யா, ராங் காலில் பேசி, ஆண்களை மடக்குவதில் கில்லாடியாக இருந்திருக்கிறார். அப்படித்தான் மூவாற்றுப்புழாவை சேர்ந்த இளைஞருக்கு ஆர்யாவிடம் இருந்து வந்திருக்கிறது செல்போன் அழைப்பு. ராங் கால் என்று சொல்லி்யும் இனிக்க இனிக்க பேசியதால் அந்த பேச்சில் மயங்கி பதிலுக்கு இளைஞருடம் பேச்சு கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து மணிக்கணக்கில் இருவரும் பேசி வந்துள்ளனர். ஒரு நாள் திடீரென்று, ‘’உன்ன நேருல பார்க்க ஆசையா இருக்கு. எங்க பார்க்கலாம்…’’ன்னு கேட்டிருக்கிறார்.


’’காஃபி ஷாப், கோவில்..’’என்று சொன்னதற்கு, ‘’அங்கெல்லாம் வேணாம்… யாராவது பார்த்துடுவாங்க. ரகசியமா நாம் பேசிட்டு இருந்துட்டு வர்ற மாதிரி ஒரு இடம் சொல்லுங்க..’’ன்னு சொல்லவும், இளைஞரும் ரொம்ப ஆர்வமாகி, ’’லாட்ஜ்….’’என்று இழுத்திருக்கிறார்.

அதற்கு சம்மதிக்க மாட்டார் என்றே அப்படி ஒரு இழுவை. ஆனால் ஆர்யாவோ, ’’அப்படின்னா ஓகே’’ன்னு சொல்லவும், சந்தோசத்தில் துள்ளி குதித்திருக்கிறார் இளைஞர்.

கேரளாவில் ஒரு குறிப்பிட்ட சொகுதி விடுதியைச்சொல்லி அங்கே வரசொல்லி இருக்கிறார் இளைஞர். ஆனால், இளைஞர் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வந்து அந்த விடுதியில் அறை எடுத்து தங்கி இருக்கிறார் ஆர்யா.
’’நான் வந்துட்டேன். ரூம் புக் பண்ணிட்டு சொல்றேன். வந்துடு’’ என்று சொல்லவும், ’’நான் முன்கூட்டியே வந்து ரூம் எடுத்து தங்கி இருக்குறேன்’’என்று ஆர்யா சொல்ல, ‘’ஆத்தாடி, அவ்வளவு அவசரமா..?’’என்று துள்ளிக்குதித்து ஓடியிருக்கிறார்.

ஆனால், ரூம் கதவை திறந்து உள்ளே சென்றது பேயறைந்தது மாதிரி நின்றிருக்கிறார். அங்கே மூன்று இளைஞர்கள் இருந்ததுதான் அந்த மிரட்சிக்கு காரணம்.


’’என்ன கரெக்ட்டா வந்துட்டியே…’’என்றபடியே வந்த ஆர்யா, இளைஞரின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணப்படுத்தி அவருடன் நின்று போட்டோ எடுத்திருக்கிறார்.

மூன்று இளைஞர்கள் உடன் இருந்ததால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இந்த போட்டோவை நெட்டுல போட்டா உன் குடும்பத்துல உன்ன பத்தி என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சுப்பாரு. இதெல்லாம் நடக்காம இருக்கணும்னா 3 லட்சம் பணம் கொடுன்னு கேட்டிருக்காங்க. அவ்வளவு பணம் இப்ப இல்லேன்னு சொல்லவும், அவரோட செல்போன், ஏடி எம் கார்டை எல்லாம் புடுங்கிக்கொண்டு , அவரை ஒரு காரில் அழைத்துக்கொண்டு போய் ஏடி எம்மில் இருந்த 35 ஆயிரம் ரூபாயை எடுத்திருக்கிறார்கள்.

அப்பவும் அவரை காரை விட்டு இறக்கிவிடாமால் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள். ஒரு இடத்தில் ஒன் பாத்ரூம் என்று சொல்லி காரை விட்டு இறங்கி இருக்கிறார். காரை விட்டு இறங்கியதும், ‘’காப்பாத்துங்க… காப்பாத்துங்க..’’ என்று கத்தியிருக்கிறார்.

கொள்ளை கும்பல் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உடனே, ஓடிவந்து இளைஞரை இழுத்து காருக்குள் திணித்திருக்கிறது. அதற்குள் ரோந்து போலீஸ் ஓடிவந்து மொத்த கும்பலையும் அள்ளியிருக்கிறது.

ஆர்யா, யாசின், அஸ்வின், ஆசிப், ரிஸ்வான் ஆகிய ஐந்து பேர் கைதாகி இருக்கும் நிலையில், இந்த கொள்ளை கும்பலில் தொடர்புடையை மேலும் 4 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு படகு, கார் வசதி… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எஸ்.பி-யின் செயல்…

தூத்துக்குடி தூத்துக்குடியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த, பொதுமக்களுக்கு படகு வசதி ஏற்படுத்தி தந்த எஸ்.பி., ஜெயக்குமாரின் செயல் அனைவரது பாராட்டையும்...

சிகரெட் பழக்கத்தினால் கொரோனா தாக்குதலை குறைக்கலாம்!

கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எச்சரித்திருந்தது. புகைப்பதன் மூலமாக வாய்க்கு வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம்...

‘நினைத்தது நடந்தது’ – உற்சாக மூடில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் தமிழக அரசியல் களத்தில் அவரது ஆளுமையை மேலும்...

“எனக்கு நீ பண்ணி விட்டத நான் வீடியோ எடுத்துட்டேன்..”-மிரட்டிய வாலிபரால் அலறிய மசாஜ் பெண்.

ஒரு மசாஜ் சென்டரில் ஒரு பெண் மசாஜ் செய்வதை வீடியோ எடுத்து ,உல்லாசத்திற்கு அழைத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .
Do NOT follow this link or you will be banned from the site!