பேராசிரியருக்கும் மாணவிக்கும்… கண்டுபிடித்த பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு

 

பேராசிரியருக்கும் மாணவிக்கும்… கண்டுபிடித்த பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு

மாணவியை காதலித்து ஏமாற்றிய பேராசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகிறது சென்னை அரும்பாக்கம் போலீஸ்.

சென்னை அரும்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியின் பேராசிரியர் லோகேஷ்(வயது26), முதலாமாண்டு மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். கல்லூரி முடிந்த பின்னர் இருவரும் தினமும் செல்போனில் பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்ததால் இருவருக்கும் இடையில் காதல் வளர்ந்தது.

இதனால் பேராசிரியரின் வில்லிவாக்கம் வீட்டுக்கு அடிக்க சென்று வந்திருக்கிறார் மாணவி. அப்போது இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

பேராசிரியருக்கும் மாணவிக்கும்… கண்டுபிடித்த பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு

இப்படி மாணவியுடன் நெருக்கமாக இருந்த பேராசிரியர் கொரோனா காலத்தில் கல்லூரி இல்லாததால் பழக முடியாத சூழல் இருந்திருக்கிறது. ஆனால், செல்போனில் பேசி வந்துள்ளார். அண்மையில் திடீரென மாணவியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார் பேராசிரியர்.

பல நாள் தொடர்ந்து முயன்றுகொண்டே இருந்த மாணவிக்கு ஒரு நாள் லைனில் வந்திருக்கிறார் பேராசிரியர். ஏன் என்கிட்ட பேசவில்லை என்று கேட்டதும், இனிமே பேசமுடியாது என்று சொல்லி இருக்கிறார். எதற்கு என்றதும், எனக்கு வீட்டில் பெண் பார்த்துவிட்டார்கள். பெற்றோர்கள் பேச்சை மீற முடியவில்லை. அதான்.. என்று இழுத்திருக்கிறார்.

மாணவி மன்றாடியும் பேராசிரியரின் மனம் இறங்கவில்லை. இதனால் அழுதுகொண்டிருந்த மகளிடம் பெற்றோர் விபரம்கேட்க, அவர் கூறியதை கேட்டு அதிர்ந்தனர். அப்புறமாக மகளை, அதுவும் மைனர் பெண்ணை ஏமாற்றிய பேராசிரியர் மீது அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள்.

புகாரின் பேரின் பேராசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகிறது போலீஸ்.