162 ரன்களுக்குள் சுருண்டது தென் ஆப்பிரிக்கா.. மீண்டும் பாலோ-ஆன்!!

 

162 ரன்களுக்குள் சுருண்டது தென் ஆப்பிரிக்கா.. மீண்டும் பாலோ-ஆன்!!

இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்குள் சுருண்டு பாலோ-ஆன் செய்து இரண்டாவது இன்னிங்ஸை தென்னாபிரிக்கா தொடர்ந்து வருகிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்குள் சுருண்டு பாலோ-ஆன் செய்து இரண்டாவது இன்னிங்ஸை தென்னாபிரிக்கா தொடர்ந்து வருகிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் ரகானே 115 ரன்களும் ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்ததாக முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் முடிவில் 9/2 என இருந்தது. 

ind vs sa

இந்நிலையில் இன்று காலை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் டு பிளசிஸ் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹம்சா மற்றும் பவுமா இருவரும் சிறிது நேரம் இந்திய பந்து வீச்சை தாக்குபிடித்தனர். 

ஆனாலும் நீண்ட இன்னிங்சை இவர்களால் ஆட முடியவில்லை. அறிமுக போட்டியில் களமிறங்கிய 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பவுமா 32 ரன்களில் ஆட்டமிழக்க, இக்கட்டான நிலைக்கு தென்ஆப்பிரிக்கா அணி தள்ளப்பட்டது. 

உணவு இடைவேளைக்குப் பின்பு மீண்டும் தாக்குதலில் இறங்கிய இந்திய பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க அணியை 162 ரன்களுக்குள் சுருட்டினர்.

india

இந்திய அணி சார்பில் அறிமுக போட்டியில் களமிறங்கிய நதீம், ஜடேஜா மற்றும் சமி மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 335 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை மீண்டும் ஃபாலோ-ஆன் செய்ய பணித்தது. 

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 10/2 என்ற கணக்கில் ஆடி வருகிறது.

-vicky