ஈரோடு: ஆதிதிராவிடர் சமூக மயானம் ஆக்கிரமிப்பு – பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு

 

ஈரோடு: ஆதிதிராவிடர் சமூக மயானம் ஆக்கிரமிப்பு – பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே ஆதிதிராவிடர் சமூகத்தினரின் மயானத்தை ஆக்கிரமித்த நபர் மீது நடவடிக்கை கோரி, பேரூராட்சி நிர்வாகத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் வெள்ளாளபாளையம் அம்பேத்கர் காலனியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை பல்லாண்டு காலமாக அவர்கள் மயானமாக பயன்படுத்தியும் வருகின்றனர். இதனிடையே அதே ஊரை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர், மயான பகுதியை ஆக்கிரமித்து, இந்து முன்னணி கொடியை கட்டியதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த மாதம் 30ஆம்
தேதியன்று அம்பேத்கர் காலனியில் உயிரிழந்த சுப்பிரமணி என்பவரது சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, கம்பிவேலியிட்டு மயான பாதையை மறித்துள்ளார்.

ஈரோடு: ஆதிதிராவிடர் சமூக மயானம் ஆக்கிரமிப்பு – பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு

பின்னர் பொதுமக்கள் போராட்டம் காரணமாக அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி, சடலத்தை மயானத்தில் புதைத்தனர். இந்நிலையில், பொன்னுச்சாமி தரப்பினர் அந்த சடலத்தை பொக்லைன் மூலம் குழிதோண்டி பள்ளத்தில் புதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதியவும் வலியுறுத்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நம்பியூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், போராட்டம்
தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.