ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ‘ஆன்லைன்’ பயிற்சி

 

ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ‘ஆன்லைன்’ பயிற்சி

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டு பள்ளிக் கல்விகள் அனைத்தும் ‘ஆன்லைன்’ மயமாகி வருகின்றன. இதில் பெரும்பாலான ஆசிரியர், ஆசிரியைகள் ஆன்லைன் வகுப்பு நடத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில், தமிழகத்தை சேர்ந்த 1 லட்சத்து 4 ஆயிரம் ஆசிரியர், ஆசியைகளுக்கு ஆன்லைன் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.இவர்கள் அனைவரும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ‘ஆன்லைன்’ பயிற்சி


இந்த பயிற்சி 4 வகைகளாக கற்றுத் தரப்படுகிறது.வகுப்புகள் நடத்துவது, மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பது, உடல் நலன், சமூக நலன் பற்றிய வகுப்புகள் இதில் இடம் பெறுகின்றன. ஆசிரியர்கள் இதனை கைபேசி மூலமே கற்றுக் கொள்ளலாம் வீடியோக்கள், கேள்வி பதில்கள் மற்றும் விளக்க உரைகள் இதில் உள்ளன.இது முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் மொத்தம் 13 “கோர்சுகள்” உள்ளன அவை படிப்படியாக கற்றுத் தரப்படும்,இந்தப் பயிற்சியை முடிக்க கால வரையரை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது நவம்பர் மாத இறுதியில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

சுபாஷ் சந்திரபோஸ்