161 இந்திய அணியின் ஸ்கோர் – கே.எல்.ராகுல் அரை சதம்

 

161 இந்திய அணியின் ஸ்கோர் – கே.எல்.ராகுல் அரை சதம்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டித் தொடர் இன்று தொடங்கியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் தமிழகத்தின் நடராஜன் இடம்பிடித்துள்ளார். மேலும், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தரும் இடம்பிடித்தது டபுள் சந்தோஷம் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

161 இந்திய அணியின் ஸ்கோர் – கே.எல்.ராகுல் அரை சதம்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். இந்திய அணி பேட்டிங் செய்கிறது. ஓப்பனிங் வீரர்களாக, கே.எல்.ராகுலும், ஷிகர் தவானும் களம் இறங்கினர். தொடக்கமே அதிர்ச்சி என்பதாக, தவான் 1 ரன் எடுத்த நிலையில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஆடமிழந்தார்.

161 இந்திய அணியின் ஸ்கோர் – கே.எல்.ராகுல் அரை சதம்

9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து இறங்கிய கோலியும் அவுட்டானார். அவரின் விக்கெட்டை வீழ்த்தியது மெட்செல் ஸ்வீப்சன்.

நிதானமாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் 23 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டைப் பறிக்கொடுத்தார். பலராலும் அணியில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்ட மனீஷ் பாண்டே வந்த வேகத்தில் திரும்பினார். அவர் அடுத்தது 2 ரன்கள் மட்டுமே. இடையில் கே.எல்.ராகுல் நிலைத்து ஆடி அரை சதம் அடித்தார். ஆனால், அடுத்து ஒரு ரன் சேர்த்து அவுட்டானார்.

161 இந்திய அணியின் ஸ்கோர் – கே.எல்.ராகுல் அரை சதம்

ஹிர்திக் பாண்டியா, ஜடேஜா ஜோடி நம்பிக்கை அளித்தது. அதிலும் ஒருநாள் போட்டியில் அசத்தலான பேட்டிங் ஆடிய ஹிர்திக் இன்று அதிரடி ஆட்டம் ஆடுவார் என்று நம்பியிருந்த நிலையில் 15 பந்துகளுக்கு 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களோடு அவுட்டானார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை 162 ரன்கள் என்பது எளிதான வெற்றி இலக்கே. அதுவும் இது பேட்டிங் பிட்ச் என்பதால் அதிக விக்கெட் இழப்பில்லாது, விரைவிலேயே அடித்து விடுவார்கள் என்றே பலரும் கணிக்கிறார்கள்.