தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட கணேசன் எம்.பி. – ஈரோட்டில் பரபரப்பு

 

தாசில்தார்  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  கணேசன் எம்.பி. – ஈரோட்டில் பரபரப்பு

மொடக்குறிச்சியில் ஐ.டி.பி.எல்., திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஈரோடு எம்.பி., தலைமையில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனகொந்தி வரை ஐ.டி.பி.எல்., எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் விவசாய விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

குழாய்களை பதிக்க நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விவசாய விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஐ.டி.பி.எல்., திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாசில்தார்  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  கணேசன் எம்.பி. – ஈரோட்டில் பரபரப்பு

இதனையடுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, அமைதி உடன்பாடு செய்தது. ஈரோடு மாவட்டத்தில், ஆர்.டி.ஓ., சைபுதீன், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, மொடக்குறிச்சி தாசில்தார் முன்பு அமைதிப் பேச்சு வார்த்தை நடந்த போது, ஐ.டி.பி.எல்., திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் அமைதி உடன்பாடு ஏற்பாடு செய்தனர். அரசிடமிருந்து அறிவிப்பு வரும் வரை இருதரப்பினரும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்தத்திற்கு மாறாக ஐ.டி.பி.எல்., திட்டப்பணிகள் தொடங்கப்பட்டதால் நேற்று மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் நிலம் எடுப்பதற்கான விசாரணை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் விவசாயிகளுக்கு அழைப்பானை விடுத்தனர்.

தாசில்தார்  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  கணேசன் எம்.பி. – ஈரோட்டில் பரபரப்பு

இந்நிலையில் நேற்று மொடக்குறிச்சி தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சங்கர்கணேஷ் தலைமையில் ஐ.டி.பி.எல்., அலுவலரும் துணை கலெக்டருமான புஷ்பா தலைமையில், ஐ.டி.பி.எல். திட்டம் நிர்வாகிகளும், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, கூட குறிச்சி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கள் ராஜன், தி.மு.க., மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப., சச்சிதானந்தம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும், நிலம் எடுப்பதை கைவிட வேண்டும், சாலையோரமாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி முடிவு செய்வதாக அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்க மறுத்து கோபமடைந்த எம்.பி., கணசேமூர்த்தி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் மற்றும் விவசாயிகள் பலர் தாசில்தார் அலுவலக அறை முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, தேதி குறிப்பிடாமல் விவசாயிகளிடம் நடைபெறும் விசாரணையை ஒத்தி வைப்பதாக அலுவலர் புஷ்பா தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.