லாரி கவிழ்ந்து கோர விபத்து : 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

 

லாரி கவிழ்ந்து கோர விபத்து : 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டம் நேரேவிலிருந்து இருந்து ராவருக்கு பப்பாளியை ஏற்றிக் கொண்டு சோப்டா பகுதி வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். இந்த நிலையில், அந்த லாரி சோப்டா பகுதியை அடக்கும் பொது திடீரென தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

லாரி கவிழ்ந்து கோர விபத்து : 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அனைவரும் அபோடா, கெர்ஹாலா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. விபத்தில் 2 குழந்தைகளும் இறந்து விட்டதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 5 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.