திருச்சி : புறவழிச்சாலை பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் சிவராசு

 

திருச்சி :  புறவழிச்சாலை பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் சிவராசு

நெடுஞ்சாலை துறையின் மூலம் அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டார். நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மண்ணச்சநல்லூர் அருகே அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை மற்றும் குடமுருட்டி முதல் ஜீயபுரம் வரை நடைபெற்று வரும் சாலை மேம்படுத்துதல் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

திருச்சி :  புறவழிச்சாலை பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் சிவராசு

திருச்சி மண்ணச்சநல்லூரில் ரூ.25.15 கோடி செலவில் 2.6 கிலோமீட்டர் தொலைவிற்கு திருச்சி – துறையூர் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, இதில் நான்கு மழைநீர் வடிகால் பாலங்கள்,14 சிறு பாசனத்திற்கான பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.

திருச்சி :  புறவழிச்சாலை பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் சிவராசு

ஏறத்தாழ 73% பணிகள் முடிவடைந்துள்ளது. இதே போல் திருச்சி குடமுருட்டி முதல் ஜீயபுரம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 7 மீட்டர் அகலத்தில் இருந்து 10.5 மீட்டர் அகலப்படுத்தும் பணிகள் ரூபாய் 55.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது, ஏறத்தாழ 55 % முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களையும் பார்வையிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வரும் 31.3.2021 க்குள் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.