சத்குருவுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்திப்பு

 

சத்குருவுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்  சந்திப்பு

பார்த்திபன், விவேக், சித்தார்த், சந்தானம் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் அவ்வப்போது சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். பொதுவாகவே இந்திய திரை நட்சத்திரங்கள் பலரும் சத்குருவுடன் அவ்வப்போது கலந்துரையாடி வரும் நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் சத்குருவை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார்.

சத்குருவுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்  சந்திப்பு

அமெரிக்காவில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இச்சந்திப்பில் வெகுநேரம் சத்குருவுடன் வில் ஸ்மித் கலந்துரையாடி இருக்கிறார். ஸ்மித்தின் குடும்பத்தினரும் சத்குருவுடன் கலந்துரையாடி இருக்கின்றனர்.

சத்குருவுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்  சந்திப்பு

வில் ஸ்மித் நடிகர் என்பதோடு, அமெரிக்க ராப் இசைப் பாடகரும் கூட. 1980களில் “ஃப்ரெஷ் பிரின்ஸ்” என்ற பெயரில் ராப் பாடல்களை படைத்தார். நண்பர் டிஜே ஜாசி ஜெஃப்புடன் சேர்ந்து ராப் உலகில் புகழின் உச்சிக்கு சென்றார். 1988ல் இவர் முதலாம் ராப் கிராமி விருதை வென்றுள்ளார்.

1990ல் ஃப்ரெஷ் பிரின்ஸ் அஃப் பெல் ஏர் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து நடிப்புலகில் காலடி வைத்தவர், 1995ல் வெளிவந்த பாட் பாய்ஸ், 1996ல் வெளிவந்த இன்டிபென்டென்ஸ் டே ஆகிய திரைப்படங்களில் நடித்து ஹாலிவுட் உலகில் புகழுக்கு வந்தார். தொடர்ந்து மென் இன் பிளாக், ஐ, ரோபாட், த பர்சூட் அஃப் ஹாப்பினெஸ், ஹான்காக் படங்களில் நடித்து புகழின் உச்சம் தொட்டவர்.

சத்குருவுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்  சந்திப்பு