ஆன்லைன் டிக்கெட்டின் கூடுதல் விலைக்கு கேளிக்கை வரி மறுப்பு:ஷண்முகா சினிமாஸ் கோரிக்கை நிராகரிப்பு

 

ஆன்லைன் டிக்கெட்டின் கூடுதல் விலைக்கு கேளிக்கை வரி மறுப்பு:ஷண்முகா சினிமாஸ்  கோரிக்கை நிராகரிப்பு

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்கு குழுமம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிக்கெட்டின் கூடுதல் விலைக்கு கேளிக்கை வரி மறுப்பு:ஷண்முகா சினிமாஸ்  கோரிக்கை நிராகரிப்பு

திரையரங்குகளில் ஆன்லைன் மூலமாக சினிமா டிக்கெட் விற்பனை செய்யும்போது கூடுதலாக முப்பது ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இந்த கூடுதல் தொகைக்கும் கேளிக்கை வரி கேட்டும், ஆன்லைன் முன்பதிவு கட்டணத்திற்கும் கேளிக்கை வரி விதிக்கும் வகையில் கேளிக்கை வரி கணக்கை மறு மதிப்பீடு செய்யக்கோரியும் ஷண்முகா சினிமாஸ் குழுமம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கூடுதலாக வசூலிக்கப்படும் இந்த கட்டணம் கேளிக்கை வரியில் வராது என்று கூறிம், கேளிக்கை வரி கணக்கை மறுமதிப்பீட்டு உத்தரவையும் ரத்து செய்து அறிவித்துள்ளது உயர்நீதிமன்றம்.