கன்னியாகுமரி: இடைத்தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

 

கன்னியாகுமரி: இடைத்தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

வசந்தகுமார் எம்.பி. மறைந்ததை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத்தொகுதிக்கு பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, வி.வி. பேட், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்துள்ளார்கள் அதிகாரிகள். நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்த இயந்திரங்களும் குமரிக்கு வந்து சேர்ந்துள்ளன. பெல் என் ஜினியர்கள் , வருவாய்த்துறை ஊழியர்களைக்கொண்டு அவற்றை சரிப்பார்க்கும் பணி கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்தது.

கன்னியாகுமரி: இடைத்தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

மேலும், வி.விபேட்களில் பொருத்தக்கூடிய பேப்பர் ரோல்களும், மின்னணு வாக்குப்பதிவு கருவியில் பொருத்துவதற்கான பேட்டரிகளும் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தன. அவற்றை தேர்தல் பிரிவு தாசில்தான் சேகர் சரிபார்த்து வைத்தார்.

இத்தனை தீவிரமாக பணிகள் நடைபெறுவதை பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவிட்டாலும் தேர்தலை நடத்த தயாராகவே இருக்கிறார்கள் அதிகாரிகள் என்பது தெரிகிறது.