கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,176 கர்ப்பிணிகளில் 1,515 பேர் டிஸ்சார்ஜ் : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,176 கர்ப்பிணிகளில் 1,515 பேர் டிஸ்சார்ஜ் : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 92,206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து விட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா அதிகமாக பரவும் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,176 கர்ப்பிணிகளில் 1,515 பேர் டிஸ்சார்ஜ் : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,176 கர்ப்பிணிகளில் 1,515 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் 500லிருந்து 750 ஆக அங்கு அதிகரித்துள்ளதாகவும் அங்கு 90% டிஸ்சார்ஜ் வீதம் இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, நுரையீரலில் கொரோனா பாதிப்பை கண்டறிய 8,000 பேருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வல்லுநர்கள் கூட கணித்து சொல்ல முடியாத கொடிய வைரஸாக கொரோனா இருப்பதாகவும் கூறினார். மேலும், விடுபட்ட 444 மரணங்கள் குறித்து அரசு தெளிவான விளக்கம் அளித்து விட்டதாகவும் கூறினார்.