“புரியாத மர்மம்?” – ரூபாய் நோட்டுக்களை அளவுக்கு அதிகமாக அச்சிடும் பாகிஸ்தான்

 

“புரியாத மர்மம்?” – ரூபாய் நோட்டுக்களை அளவுக்கு அதிகமாக அச்சிடும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது..எதற்காக பண நோட்டுக்களை அதிக அளவில் அச்ச்சிடுகிறார்கள் என்பது மர்மமாக உள்ளது.


பாகிஸ்தானில் உள்ள மத்திய வங்கியின் இணையதளத்தில், அங்கு புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் உள்ளன.அதன்படி , கடந்த 2012-ம் நிதியாண்டின் அதாவது ஜூன் இறுதியில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் எண்ணிக்கை 1.73 லட்சம் கோடி ஆகும். இது அடுத்த ஆண்டு 1.93 லட்சம் கோடியாக அதிகரித்தது.

“புரியாத மர்மம்?” – ரூபாய் நோட்டுக்களை அளவுக்கு அதிகமாக அச்சிடும் பாகிஸ்தான்


2014-ம் நிதியாண்டின் இறுதியில், இவற்றின் எண்ணிக்கை 2.17 லட்சம் கோடியாக அதிகரித்த நிலையில், அடுத்த ஆண்டு இது 2.55 லட்சம் கோடியானது2016-ல், புழக்கத்தில் உள்ள ரூபாய் தாள்கள் மற்றும் நாணயங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகி 3.33 லட்சம் கோடியாக இருந்தது.இது 2017-ம் ஆண்டு 3.91 லட்சம் கோடியாக அதிகரித்தது. 2018-ம் நிதியாண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 4.38 லட்சம் கோடியைத் தொட்டது, அடுத்த 2019-ம் ஆண்டு அதிகபட்சமாக 4.95 லட்சம் கோடியாக இருந்தது.


இந்த நிளையில் கடந்த 2020 நிதியாண்டில் 6.14 லட்சம் கோடி என்ற அளவில் ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டுள்ளனர். இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும் பொழுது இது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் ஏன் இவ்வளவு அளவுக்களவு அதிகமாக பணத்தை அச்சிடுகிறது என்பது தெரியவில்லை.

– இர. சுபாஸ் சந்திர போஸ்