திருச்சி: கே.என்.நேரு தலைமையில் தி.மு.க விவசாய அணியினர் ஆலோசனை

திருச்சி: கே.என்.நேரு தலைமையில் தி.மு.க விவசாய அணியினர் ஆலோசனை

திருச்சி மாவட்ட தி.மு.க விவசாய அணி ஆலோசனை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாய அணி மாநில செயலாளர் சின்னசாமி, விஜயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருச்சி: கே.என்.நேரு தலைமையில் தி.மு.க விவசாய அணியினர் ஆலோசனை

இந்த கூட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்து அவற்றுக்குரிய விலையை விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும்.

திருச்சி: கே.என்.நேரு தலைமையில் தி.மு.க விவசாய அணியினர் ஆலோசனை

மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு,

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு என்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என்ற ஆலோசனையை தெரிவிக்க கேட்டுக் கொண்டார். மேலும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை அரசு ரத்துசெய்யும் பட்சத்தில் அதற்கு மாற்றாக சூரிய ஒளி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் ஆந்திரா, கர்நாடகம் போல் தமிழகத்தில் பாசன கால்வாய்களை சீரமைத்தல் உள்பட பல்வேறு திட்டங்களை நாம் தேர்தல் அறிக்கையில் கொண்டுவர வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

திருச்சி: கே.என்.நேரு தலைமையில் தி.மு.க விவசாய அணியினர் ஆலோசனை