‘’நீங்க அதிமுககாரங்க; அப்டித்தான் பேசுவீங்க…’’-நழுவிய திமுக எம்.பி.

 

‘’நீங்க அதிமுககாரங்க; அப்டித்தான்  பேசுவீங்க…’’-நழுவிய திமுக எம்.பி.

தேமுதிகவில் இருந்து திமுக சென்ற எஸ்.ஆர்.பார்த்திபன். அங்கே எம்.பியும் ஆனார். அவர் தனது சேலம் தொகுதியில் காரில் போகும்போது, நூறு நாட்கள் வேலை செய்துகொண்டிருந்தவர்களை பார்த்துவிட்டு காரை விட்டு இறங்கி போய் நலம் விசாரித்திருக்கிறார்.

அப்போது பார்த்திபனிடம் கொஞ்சமும் எதிர்பாராத வகையில், ‘’சொன்னதை செஞ்சீங்களா?’’என்று கேட்டு அதிர்ச்சியை தந்திருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

‘’நீங்க அதிமுககாரங்க; அப்டித்தான்  பேசுவீங்க…’’-நழுவிய திமுக எம்.பி.

’’விவசாயக்கடன், நகைக்கடனை எல்லாம் தள்ளுபடி செய்யுறதா சொன்னீங்களே..என்னாச்சு?’’என்று கேட்க,
‘’ஆட்சிக்கு வந்தாதானே இதையெல்லாம் செய்யுறதா சொல்லியிருந்தோம்’’என்று மழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், ‘’ஆட்சிக்கு வந்தாதான் செய்வோம்னா அப்புறம் இப்ப எதுக்கு வந்தீங்க? தேவையில்லாமல் எங்க பொழப்ப கெடுக்க வந்தீங்களா?’’என்று கேட்க, ’’நீங்க அதிமுககாரங்க. அப்டித்தான் பேசுவீங்க…’’என்று சொல்லிவிட்டு நழுவினார் பார்த்திபன்.