உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் ஜொஷிமத் பகுதியில் பனிப்பாறை உருகியதால், தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

உத்தராகண்ட் முதல்வர் ராவத்துடன் மத்திய அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக பேசியுள்ள நிலையில், டெல்லியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்தரகாண்ட் விரைந்துள்ளனர். இதனிடையே உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் குறித்து நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.