கோவை அருகே வீட்டில் பதுக்கிய 150 கிலோ கஞ்சா பறிமுதல் – தம்பதி கைது!

 

கோவை அருகே வீட்டில் பதுக்கிய 150 கிலோ கஞ்சா பறிமுதல் – தம்பதி கைது!

கோவை

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வீட்டில பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவை, தனிப்படை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட எஸ்.பி. அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அவரது உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார், கருமத்தம்பட்டி பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள வீட்டில் தீடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் 2 கிலோ எடையிலான 75 கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த நடராஜன் (50) மற்றும் அவரது மனைவி கலாவதி (60) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

கோவை அருகே வீட்டில் பதுக்கிய 150 கிலோ கஞ்சா பறிமுதல் – தம்பதி கைது!

அதில், அவர்கள் கேரள வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய, கடந்த 1 மாதத்திற்கு முன்பு கருமத்தம்பட்டியில் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. முன்னதாக, திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயவாடாவில் இருந்து ரயிலில் வந்த 150 கிலோ கஞ்சாவை, காரில் கோவைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்து.

தொடர்ந்து, கேரள கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக காத்திருந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.