‘மீண்டும் ஆட்சி அமைப்போம்’ அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

 

‘மீண்டும் ஆட்சி அமைப்போம்’ அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்று வரும் செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு குழப்பங்களுக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கடிதத்துடன் வர வேண்டும் என்றும் செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டதன் பேரில், உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் 300க்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர், தேர்தல் பணி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

‘மீண்டும் ஆட்சி அமைப்போம்’ அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அதன் படி முதற்கட்டமாக, தற்போது செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது ஒன்றாக பணியாற்றி மீண்டும் ஆட்சி அமைப்போம், தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கை தான், மொழித்திணிப்பை ஏற்க மாட்டோம், நீட் தேர்வை கைவிட வேண்டும், மேகதாது அணை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, முதல்வர் வேட்பாளர் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.