15 லட்சம் எங்கே, விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசு: ராகுல் விமர்சனம்

 

15 லட்சம் எங்கே, விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசு: ராகுல் விமர்சனம்

காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது என விமர்சித்துள்ளார்.

பீகார்: காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது என விமர்சித்துள்ளார்.

‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வருகிறது.

பீகாரில் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசு ஊழல்களுக்கு கோடிகளில் பணம் வழங்குகிறது. ஆனால் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு ரூ. 17 வழங்குகிறது. பாஜக வாக்குறுதிகளைதான் அள்ளி வீசுகிறது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ்தான் காப்பாற்றுகிறது . பிரதமர் மோடி வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் போடப்படும் என கூறினார். ஆனால் இதுவரை யாராவது பெற்றீர்களா?, இப்போது புதிய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 17 ரூபாய் நாளொன்றுக்கு வழங்கப்படுகிறது.

நாங்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் விவசாயக் கடன் தள்ளுபடியென வாக்குறுதியளித்தோம். அதன்படி ஆட்சிக்கு வந்த சில நாட்களிலே நிறைவேற்றிவிட்டோம் என கூறியுள்ளார்.