இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் 148 பாலஸ்தீனர்கள் பலி!

 

இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் 148 பாலஸ்தீனர்கள் பலி!

கிழக்கு ஜெருசலேம் நகரை யார் கைப்பற்றுவது என்ற யுத்தம் இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. அந்த நகரை இஸ்ரேல் முழுவதுமாகக் கைப்பற்ற துடிக்கிறது. பாலஸ்தீனர்களோ ஜெருசலேம் எங்களது தலைநகர் விட்டு கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக இருக்கின்றனர். இதனால் இரு பிரிவினருக்கும் அவ்வப்போது மோதல் வெடிக்கும். ஆனால் இம்முறை வெடித்துள்ள மோதலானது 2014ஆம் ஆண்டு காஸாவில் நிகழ்ந்த போரை நினைவுப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் 148 பாலஸ்தீனர்கள் பலி!

1967ஆம் ஆண்டு மே 9ஆம் தேதியன்று கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. இதனைக் கொண்டாடும் விதமாக, ரமலான் மாதத்தின் இறுதி நாள்களில் இஸ்லாமியர்கள் அதிகப்படியாக வசிக்கும் பகுதிகளின் வழியாக யூதர்கள் கொடி அணிவகுப்பு நடத்துவார்கள். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் கடும் மோதல் ஏற்படும். இந்தாண்டும் இந்த ரமலான் மாதத்தில் கடந்த திங்கட்கிழமை உரசல் ஆரம்பித்தது. பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் தாக்கிக் கொண்டதில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் 148 பாலஸ்தீனர்கள் பலி!

இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சொன்னது போலவே இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்வாறாக இரு தரப்பும் மாறி மாறி வான்வழி தாக்குதலை நிகழ்த்தினர். மோதல் உச்சம் பெறவே ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக 200 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவினர். இதில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் உள்பட 35 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் 148 பாலஸ்தீனர்கள் பலி!

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ச்சியாக வான் வழி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் 148 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் 41 குழந்தைகளும் அடக்கம். 23 பெண்களும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். நிலைமை கைமீறி போகும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன. இப்படியே சென்றால் போர் மூளும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்திருக்கின்றனர்.