‘சென்னையில் 144 தடை நீட்டிப்பு’.. காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

‘சென்னையில் 144 தடை நீட்டிப்பு’.. காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 99,794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

‘சென்னையில் 144 தடை நீட்டிப்பு’.. காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

பாதிப்பு அதிகரித்து கொண்ட வருவதால் மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார். அதன் படி இன்று முதல் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

‘சென்னையில் 144 தடை நீட்டிப்பு’.. காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

இதனிடையே சென்னையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் போடப்பட்ட 144 தடை உத்தரவு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னையில் பொது இடங்களில் 5க்கும் மேற்பட்டவர்கள் கூட தடை தொடருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.