144 தடை உத்தரவால் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த நிச்சயதார்த்தம்!

 

144 தடை உத்தரவால் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த நிச்சயதார்த்தம்!

திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் முடிவுசெய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக நிச்சயதார்த்தம் செய்யவும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. 

தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் வீடியோ கான்பரன்சிங் மூலம்  நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

tt

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு அதாவது வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் நிசான் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ராகேஷுக்கும் பெங்களூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அம்ருதா கிருஷ்ணா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் முடிவுசெய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக நிச்சயதார்த்தம் செய்யவும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. 

tt

இருப்பினும் கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு ராகேஷ்- அம்ருதா நிச்சயதார்த்தம் இரு  குடும்பத்தினர் முன்னிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.