ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் இன்று 9 பேர் உயிரிழப்பு

 

ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் இன்று 9 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த 9 பேரோடு சேர்த்து தமிழகத்தில் இதுவரைக்கும் 12ஆயிரத்து 618 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

1,437 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 532 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் இன்று 9 பேர் உயிரிழப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், படிப்படியாக மனிதர்கள் மூலம் பரவ தொடங்கி அண்டை நாடுகளுக்கு பரவியது. குறிப்பாக இந்த வைரஸ் தொற்று 2020 ஜனவரி மாத இறுதியில் இந்தியாவுக்குள் நுழைய கேரளத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் முதல் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளியாக கண்டறியப்பட்டார். பின்னர் நாடு முழுவதும் பரவ தொடங்கிய இந்த தொற்று, பல கோடிக்கணக்கான உயிர்களை பதம் பார்த்தது.

ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னர் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிட்டது என்று நினைத்தபோது, மிண்டும் இப்போது இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.

ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் இன்று 9 பேர் உயிரிழப்பு

ஆயிரத்திற்கு குறைவாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இப்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. இன்றைக்கு தமிழகத்தில் 1,437 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி 9ஆயிரத்து 145 பேர் தமிழகத்தில் கொரொனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இன்றைக்கு 1,437 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், அதிர்ச்சி தரும் நிலையில், இன்றைக்கு ஒரே நாளில் 902 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் ஆறுதலை தருகிறது. இதுவரைக்கும் 8 லட்சத்து 48 ஆயிரத்து 41 பேர் குணமடைந்துள்ளனர்.