மதுரையில் ஒரே நாளில் 14 பேர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர்!

 

மதுரையில் ஒரே நாளில் 14 பேர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர்!

பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த ஒரு நோயாளியிடம் இருந்து ரத்தத்தை எடுத்து மற்றொரு கொரோனா தொற்று நோயாளிக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடம்பில் செலுத்தப்படும் ரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸை அழிக்கின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்த முடிகிறது. தமிழகத்தில் இந்த பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அண்மையில் அனுமதி வழங்கியது.

மதுரையில் ஒரே நாளில் 14 பேர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர்!

தமிழகத்தில் முதல்முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த ஒருவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 5 பேரிடம் பிளாஸ்மா தானம் பெறப்பட்டது. இந்த நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 14 பேர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.