14-ம் தேதி கூடும் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை

 

14-ம் தேதி கூடும் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை

இலங்கை நாடாளுமன்றத்தில் வருகிற 14-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என அந்நாட்டு அமைச்சர் லட்சுமன்யாப்பா தெரிவித்துள்ளார்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் வருகிற 14-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என அந்நாட்டு அமைச்சர் லட்சுமன்யாப்பா தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. நாடாளுமன்றத்தில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. நானே  பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதனால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் வருகிற 14-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என அந்நாட்டு அமைச்சர் லட்சுமன்யாப்பா தெரிவித்துள்ளார்.