14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து அசத்தல்!

 

14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து அசத்தல்!

14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து மருத்துவராகி அசத்தியுள்ளார்.

பெங்களூரு: 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து மருத்துவராகி அசத்தியுள்ளார்.

கர்னாடக மாநிலம் கலாபுராகி பகுதியை சுபாஷ் படேல் என்பவர் கடந்த 1997-ஆம் ஆண்டு பெங்களூருவில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தார்.  ஆனால் ஒரு கொலைக் குற்றத்திற்காக சுபாஷ் சிறைக்கு செல்ல நேரிட்டது. இதையடுத்து கடந்த 2002-ஆம் ஆண்டு சுபாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு மாணவர் ஆவார்.

இந்த நிலையில் சிறைவாசம் அனுபவித்தபோது அங்கு சிறைத் தறை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உதவி செய்யும் வேலையை சுபாஷ் செய்தார். இதைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை முடித்துவிட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியே வந்த சுபாஷ், தொடர்ந்து எம்.பி.பி.எஸ் படிப்பை படிக்க ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்று படித்தார். தேர்வுகளை முறையாக எழுதி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சுபாஷ் வெற்றிகரமாக எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார். தற்போது அவர் மருத்துவராக ஓராண்டு இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்துள்ளார்.