’வட்டச் செயலாளர் டிரம்ப் அவர்களே!’ – திமுகவில் நடக்கும் உறுப்பினர் சேர்க்கை கூத்து

 

’வட்டச் செயலாளர் டிரம்ப் அவர்களே!’ – திமுகவில் நடக்கும் உறுப்பினர் சேர்க்கை கூத்து

’’வட்டச் செயலாளர் டொனால்ட் டிரம்ப் அவர்களே!’’ என திமுகவினர் சொல்ல வேண்டியதுதான் பாக்கி. ஆம்! இவரைப் போன்று அகில உலக அளவில் பலரும் இப்போது அந்தக் கட்சியில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
’’காமெடி பண்ணாதீர்கள்’’ என்கிறீர்களா! நிஜம் பாஸ்… அக்மார்க் நிஜம்.

சுமார் 350 கோடி ரூபாய் செலவில் ஓப்பந்தம் செய்யப்பட்டு இன்று திமுகவையே ஆட்டிப்படைக்கும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி அந்த கட்சி ’எல்லோரும் நம்முடன்’ என்கிற திட்டத்தை இப்போது செயல்படுத்தி வருகிறது. இதன்படி இணைய வழியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்து வருவதாக அள்ளிவிடுகிறது திமுக வட்டாரம்.
ஆனால் உண்மையில் நடப்பது என்ன தெரியுமா?

’வட்டச் செயலாளர் டிரம்ப் அவர்களே!’ – திமுகவில் நடக்கும் உறுப்பினர் சேர்க்கை கூத்து

’’ கட்சிக்கு நேரடியா உறுப்பினர் சேர்ப்பதிலேயே ஏகப்பட்ட பிரச்சனைகள். தாங்கு தாங்குண்ணு தாங்கித்தான் சேர்க்க வேண்டி இருந்தது. இப்ப இண்டர்நெட் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியிருக்காங்க. பெயர், முகவரி போன்ற முக்கிய விஷயங்களுக்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. போட்டோ கூட கட்டாயமில்லை. இதனால தலைமையை கூல் பண்றதுக்காக கண்டவங்க பேரில் உறுப்பினர் பதிவு நடைபெற்று வருகிறது. ஒரே ஆள் முகவரியை மாற்றிக் கொடுத்து பலமுறை உறுப்பினராகும் கண்றாவியெல்லாம் நடக்குது.’’ என்றார்… இது தொடர்பாக நம்மிடம் பேசிய வட சென்னை பகுதியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர்.
இவர் சொன்னது நிஜம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றிருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

இந்த உறுப்பினர் அட்டை இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அடுத்ததாக ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் திமுக உறுப்பினர் ஆக வேண்டியதுதான் பாக்கி.