பூமராங்காக திருப்பித் தாக்கும் நீட் – சிக்கிக்கொண்ட திமுக, காங்கிரஸ்

 

பூமராங்காக திருப்பித் தாக்கும் நீட் – சிக்கிக்கொண்ட திமுக, காங்கிரஸ்

நீட் தேர்வு விவகாரம் பூமராங்காக இப்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளையே திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் நீட் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அக்குவேறு ஆணி வேறாக அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து இது தொடர்பான விவாதங்கள் தமிழகம் முழுவதும் சூடு பிடித்துள்ளன.

’நீட் தேர்வு, மத்தியில் திமுக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் அரசாலேயே கொண்டுவரப்பட்டது’ என எடப்பாடி சுட்டிக்காட்டிய மலரும் நினைவுகள், கடைக்கோடி தமிழகம் வரை சென்று சேர்ந்திருக்கின்றன.

பூமராங்காக திருப்பித் தாக்கும் நீட் – சிக்கிக்கொண்ட திமுக, காங்கிரஸ்

நீட்டுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் கச்சை கட்டியதையும் அதிமுக தரப்பு விட்டுவைக்காமல் பொதுவெளியில் எடுத்துவைத்தது. இதனால் ப.சிதம்பரம் படு அப்செட்டாம். ’’நாடு முழுவதுமே நீட்டை ஏற்றுக்கொண்டாகிவிட்டது. இதில திமுக மட்டும் தனி ஆவர்த்தனம் பண்ணப்போக, நமக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டிருச்சி’’ என நெருங்கிய வட்டத்தில் வருத்தப்பட்டிருக்கிறார் அவர்.

பூமராங்காக திருப்பித் தாக்கும் நீட் – சிக்கிக்கொண்ட திமுக, காங்கிரஸ்

ஏறத்தாழ இதே மாதிரியான நிலைதான் திமுகவிலும்.
நீட் விவகாரத்தில் தன்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டதில் அக்கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி செம கடுப்பில் இருக்கிறாராம். ‘’எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, நீட் பற்றி கருத்து சொல்ல குடைச்சல் தந்தாங்க. நானும் அவசரப்பட்டு வாய் திறக்க, அது நம்மையே திரும்பத் தாக்க தொடங்கியிருக்குது. இதெல்லாம் தேவையா!’’ என கொந்தளிக்கும் உதயநிதியின் கோபம் ’திமுகவின் பெரியண்ணன்’ பிரசாந்த் கிஷோர் மீதும், மைத்துனர் சபரீசன் மீதும்தானாம்.

பூமராங்காக திருப்பித் தாக்கும் நீட் – சிக்கிக்கொண்ட திமுக, காங்கிரஸ்

திமுக ஐடி விங்கின் பொறுப்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,’’ நீட் விவகாரத்தில் நாம மூக்கை நுழைக்க வேண்டாம். அது நமக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும்’’ என ஏற்கனவே ஓரிரு முறை எச்சரிக்கை கொடுத்திருந்தும் திமுக தலைமை அதை சட்டை செய்யவில்லை. இப்போது வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட நிலையில் அதனை உள்ளூர ரசிக்கிறாராம் தியாகராஜன்.

நீட் விவகாரம் தொடர்பான பிரச்சனையில் அதிக பாதிப்பு திமுகவின் பொதுச் செயலாளரான துரைமுருகனுக்குத்தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். கல்வித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் துரைமுருகனின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த், நீட் கோச்சிங் நடத்தி பெருமளவு கல்லா கட்டி வந்தார். ’’கட்சித்தலைமை நீட்டை எதிர்க்கும்போது இப்படி கோச்சிங் நடத்தலாமா!’’ என பலரும் கொளுத்திப் போட துரைமுருகன் தரப்புக்கு சிக்கலாகிவிட்டதாம். இதனால்தான் நீட் விவகாரத்தில் இவர் இதுவரை பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் உச்சபட்ச காமெடி ‘’ அடுத்த எட்டு மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்ததும்(!) நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’’ என ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புதான். ’’ஒன்றுக்கு பலமுறை உச்சநீதிமன்றமே தெளிவாகத் தீர்ப்பு அளித்துவிட்ட நிலையில் இதெல்லாம் சாத்தியமா, பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா!’’ என படிப்பறிவில்லாதவர்கள் கூட ஸ்டாலினை நோக்கி கேள்விக்கணைகளை வீசத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் நீட் விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் மக்கள் மன்றத்தில் அடியோடு அம்பலப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.