மக்காச் சோள தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா செடி வளர்ப்பு – விவசாயி கைது

 

மக்காச் சோள தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா செடி வளர்ப்பு – விவசாயி கைது

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் விவசாய நிலத்தில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

ஆசனூர் மலைப்பகுதி ஒரத்தி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி . இவர் தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் மக்காச் சோளம் பயிரிட்டுள்ளார். இந்த நிலத்தில், மக்காச்சோள பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குருசாமியின் மக்காச்சோள தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.

மக்காச் சோள தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா செடி வளர்ப்பு – விவசாயி கைது

அப்போது, சுமார் 2 அடி முதல் 3 அடி வரை வளர்ந்து இருந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் எடை 4 கிலோ இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து விவசாயி குருசாமியை கைது செய்த போலீசார், யாருக்காக கஞ்சா செடி பயிரிட்டார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.