திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிக்கும் பணி: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைப்பு

திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிக்கும் பணி:  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைப்பு

திருச்சியில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 3ஆவது கட்டமாகப் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் உள்ள 16 வார்டுகளில் 335 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்திற்கான குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 7 இடங்களில் பாதாள சாக்கடை கழிவு நீர் உந்து நிலையம், ஒரு நீரேற்று நிலையம், 12 ஆயிரத்து 389 சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்படுகிறது.

திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிக்கும் பணி:  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைப்பு

மூன்றாவது கட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் மொத்தம் 32 ஆயிரம் இணைப்புகளும், 349 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாயும் பதிக்கப்படுகிறது. 36 மாதங்களில் இந்தப் பணியை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் ஒரு கட்டமாக திருச்சி கே.கே. நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கார்த்திகேயன், அதிமுக பகுதி செயலாளர்கள் ஞானசேகர், மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.