ஒரே நாளில் கொரோனாவுக்கு 137 பேர் உயிரிழப்பு!

 

ஒரே நாளில் கொரோனாவுக்கு 137 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 137 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 137 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணமே இருக்கிறது. ஒரு சில நாட்களில் வழக்கமாக இருக்கும் பாதிப்பை விட அதிகமாக இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதனிடையே, கடந்த 16ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியிருக்கும் நிலையில், இதுவரை 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக தெரிகிறது. விரைவில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையை இந்தியா அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 137 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,083 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும், ஒரே நாளில் 137 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் தற்போது 1,69,824 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,33,131 ஆக உயர்ந்துள்ளதாகவும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,54,147 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.