சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு ! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் நீக்கம்!

 

சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு ! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம்  நீக்கம்!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து , பணப் பரிவர்த்தனை செயலியான பேடிஎம் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேடிஎம் செயலி ஆன்லைன் விளையாட்டுகளையும், ஆன்லைன் சூதாட்டங்களையும் ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

முன்னணி ஆன்லைன் பரிவர்த்தனை செயலியான பேடிஎம், கூகுள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருப்பது, பேடிஎம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது தொடர்பாக பேடிஎம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலியை புதிதாக டவுன்லோட் செய்ய அல்லது அப்டேட் செய்வதற்கான தடை தற்காலிகமானதுதான், விரைவில் மீண்டும் வருவோம் என தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்றும், வழக்கம்போல , தங்களின் சேவையை தொடரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு ! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம்  நீக்கம்!

கூகுள் நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டில், பேடிஎம் செயலி ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்வதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் விளையாட்டு என்கிற பெயரில் ஆன்லைன் சூதாட்டம், வரைமுறைப்படுத்தப்படாத விளையாட்டு தளங்களை கூகுள் ஸ்டோரில் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் பேடிஎம் நிறுவனம் , விளையாட்டு என்கிற பெயரில், ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை ஆதரிப்பதாக கூறியுள்ளது. இதையடுத்து , பேடிஎம் ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு ! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம்  நீக்கம்!

முன்னணி பரிவர்த்தனை செயலியான, பேடிஎம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவது இது முதல்முறையாகும். எனினும் எனினும், பேடிஎம் மணி, பேடிஎம் ஃபார் பிசினஸ், பேடிஎம் இன்சைடர் உள்ளிட்ட இதர செயலிகள் பிளே ஸ்டோரில் நீடிக்கின்றன. இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், எங்களது பயனர்களை பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

”எங்களது கொள்கைகளை மீறும் டெவலெப்பர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் கொடுத்து கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தி வருகிறோம், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம்” எனவும் கூகுள் அதிகாரிகள் கூறினர்.

விளையாட்டு சூதாட்டம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு அணியை உருவாக்குவது என்கிற பெயரில் ஆன்லைன் அணியை உருவாக்குவதற்கு செயலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த செயலிகளை பல மாநிலங்கள் அனுமதித்துள்ளன. ஆனால் இப்படி செய்வது சூதாட்ட விதி என கூகுள் கூறி வருகிறது.