சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்காலிகப் பணிதான்; நிரந்தர பணிக்கு வாய்ப்பு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்காலிகப் பணிதான்; நிரந்தர பணிக்கு வாய்ப்பு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

சிறப்பு ஆசிரியர்கள் தற்காலிகப் பணி என்ற முறையிலேயே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிரந்தர பணிக்கு வாய்ப்பு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்காலிகப் பணிதான்; நிரந்தர பணிக்கு வாய்ப்பு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருமந்தூா், நம்பியூா் ஆகிய பகுதிகளில் பள்ளம் தூா்வாருதல் தாா்ச்சாலைகள் மேம்பாட்டுபணிகள் என 2.40 கோடி ரூபாய் மதிப்பிலான வளா்ச்சி திட்டப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்காலிகப் பணிதான்; நிரந்தர பணிக்கு வாய்ப்பு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் மூலம் சிறப்பு ஆசிரியர்களுக்கான பணி வழங்கும் போதே தற்காலிக ஆசிாியா்கள் பணி என்றுதான் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு இல்லை’’ என்று தெரிவித்தார்.