Home தமிழகம் கொடுமணல் அகழாய்வில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

கொடுமணல் அகழாய்வில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

சென்னிமலை அருகே நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. தாழிக்குள் இருந்த எலும்புகள் ஆய்வுக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் 2300 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் பல்வேறு கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் உதவி தொல்லியலாளர் நந்தகுமார், தொல்லியல் வல்லுநர் சுப்பிரமணியம் ஆகியோர் மேற்பார்வையில் கொடுமணல் பகுதியில் கடந்த 4 மாதங்களாக அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அகழாய்வு பணியில் அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகளும், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணிகள், வாள், சிறிய கத்திகள், மண் குவளை, மண் ஜாடிகள் உள்பட ஏராளமான பொருட்களையும் கண்டுபிடித்தனர்.

கல்லறைகள் இருந்த பகுதியில் ஆய்வு செய்த போது பெரிய அளவிலான 3 பானைகள் மண்ணில் புதைந்து கிடந்தது. இதில் ஒரு பானையை நேற்று (15-9-2020-செவ்வாய்கிழமை) புதுச்சேரி பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.ராஜன் தலைமையில், கீழடி அகழாய்வு துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் மற்றும் கீழடி அகழாய்வாளர் பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மண் நிரம்பி கிடந்த அந்த பானையில் மனிதனின் உடைந்த மண்டை ஓடுகள் மற்றும் கை, கால் எலும்புகள் ஆகியவை இருந்தது. இதில் சில மாதிரிகளை டி.என்.ஏ பரிசோதனைக்காக ஆய்வுக்குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு மிகவும் பத்திரமாக எடுத்து சென்றனர்.
அந்த ஆய்வில் பானைக்குள் இருந்த எலும்புகள் யாரோட தொடர்புடையது என்பதை கண்டுபிடிக்க உதவும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

தற்போதைய ஆய்வில் செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கல்மணிகளும், பிராமி எழுத்துக்களையும் கண்டு பிடித்துள்ளனர். இந்த அகழாய்வு பணி வருகிற 30-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது என இந்திய தொல்லியல் துறையின் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தெரிவித்தார்.

Most Popular

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார்.. வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார் என வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சில தினங்களுக்கு...

உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை?.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. எம்.பி..

மாநிலங்களவையில், உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர்களை பா.ஜ.க. எம்.பி. கேள்வியால் தாக்கினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை...

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனத்தின் லாபம் ரூ.17 கோடியாக சரிவு

2020 ஜூன் காலாண்டில் ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.17.22 கோடி ஈட்டியுள்ளது. ஸ்டெர்லிங் அண்டு வில்சன்...

இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ், இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். கொரோனா வைரஸால்...
Do NOT follow this link or you will be banned from the site!