ஒரே நாளில் 1,321 பேர் கொரோனாவுக்கு பலி: சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

 

ஒரே நாளில் 1,321  பேர் கொரோனாவுக்கு பலி: சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,321 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏற்படும் தினசரி கொரோனா தொற்று விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு தொற்று உறுதியானதாகவும் 1,321 பேர் உயிரிழந்ததாகவும் 68,885 பேர் குணமடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 1,321  பேர் கொரோனாவுக்கு பலி: சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

அதே போல மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 3,00,82,778 , குணமடைந்தோர் எண்ணிக்கை – 2,90,63,740, இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை – 3,91,981 ஆக உயர்ந்துள்ளதாகவும் தற்போது 6,27,057 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்டத்தில் கொரோனா பாதிப்பு தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்துக்கு மேல் இருந்தது. தற்போது 50 ஆயிரமாக குறைந்துள்ளது. குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எனினும், மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் அனைத்து மாநில அரசுகளும் தயார் நிலையில் இருக்கின்றன. இரண்டாம் அலையை போல மூன்றாம் அலை பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.