கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி!

ராஜஸ்தானுக்கு கடத்தப்பட இருந்த 13 வயது சிறுமி ஒருவர் மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் வைத்து ஐந்து நபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஜெய்ப்பூரிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இந்த குற்றம் தொடர்பாக சிறுமியின் பெண் நண்பர் மற்றும் இரண்டு சிறுமிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தேவாஸில் தனது அத்தை வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்த மகளைக் காணவில்லை என்று சிறுமியின் தந்தை ஜூன் 16-ம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.

Rep. Image

ஜூன் 15 அன்று தேவாஸ் ரயில் நிலையத்தில் இருந்து சிறுமியைக் கடத்தியவர்களுக்கு உதவி செய்ததற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சிறுமி தனது இரு சக்கர வாகனத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு ரோஹித் காதிக் (23), அஜய் காதிக் (20), விஷால் கோஸ்வாமி என்ற மூவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த சிறுமி ராஜஸ்தானுக்கு கடத்தப்பட இருந்ததாகவும் போலீஸ் தெரிவித்தனர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Most Popular

பீகார் சட்டப்பேரவையில் ஒரு கேள்வி கூட கேட்காமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்…

பொதுவாக பீகார் சட்டப்பேரவையின் மழைகாலக் கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக கூட்டத்தொடர் 1 நாளாக குறைக்கப்பட்டது. மேலும் பீகார் சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர்...

ஒரே மாசம்தான் 2.52 லட்சம் வாகனங்கள் காலி.. வேகம் எடுத்த டி.வி.எஸ். மோட்டார் வாகனங்கள் விற்பனை..

நாட்டின் முன்னணி இரு மற்றும் 3 சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 2.52 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2020 ஜூனுடன் ஒப்பிட்டால்...

ராமர் கோயில் பூமி பூஜை.. என் பெயரை நீக்குங்க.. பிரதமர் மோடி சென்ற பிறகுதான் வருவேன்.. உமா பாரதி தகவல்

ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், அந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தர...

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...