பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

 

பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகியுள்ள நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிப்போனது. மே 3 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா அதிகரித்து வந்ததால் தேதி குறிப்பிடாமல் தமிழக அரசு 12 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்தது. இந்த சூழலில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்றைய கூட்டத்தில் பெற்றோர்கள், பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட நிலையில் ஆலோசனை நடைபெற்றது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

இந்நிலையில் கொரோனா குறைந்த பிறகு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி போகுமே தவிர ரத்து செய்யப்படமாட்டாது.பொதுத் தேர்வை நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர் .குறிப்பாக கல்வியாளர்கள் ,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்துக்கு முன்பே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்க வலியுறுத்தி உள்ளன என்றார்.