12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? நாளை ஆலோசனை

 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? நாளை ஆலோசனை

கொரோனா பரவலால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் 9 ,10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதை போல, இந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், கொரோனா வைரசின் இரண்டாம் அலை பரவியது. இதனால் இந்த ஆண்டும் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் அவர்களுக்கு திறனறிவு தேர்வை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? நாளை ஆலோசனை

இந்நிலையில் கொரோனா பரவலால் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு நாளை முக்கிய முடிவு எடுக்கவுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுவரும் நிலையில் தமிழகத்திலும் ரத்து செய்வது தொடர்பாக தலைமை செயலாளர் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். தலைமை செயலாளர் தலைமையில் சுகாதாரம், வருவாய், பள்ளிக்கல்வி செயலாளர்கள் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? நாளை ஆலோசனை