பிளஸ் 2 மாணவர்களுக்கு 2 நாட்களில் வருகிறது சர்ப்ரைஸ்!

 

பிளஸ் 2 மாணவர்களுக்கு 2 நாட்களில் வருகிறது சர்ப்ரைஸ்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து ஆந்திரா தவிர்த்து உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு 2 நாட்களில் வருகிறது சர்ப்ரைஸ்!

சிபிஎஸ்இ தாக்கல் செய்த மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் முறையைத் தனது இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. மாணவர்களுக்குத் தனி குறை தீர்க்கும் மையம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சிபிஎஸ்இ வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த விசாரணையின்போது உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், அனைத்து மாநிலங்களும் மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு 2 நாட்களில் வருகிறது சர்ப்ரைஸ்!

தேர்வு முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் கூறியது. சிபிஎஸ்இ 10, 11, 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் விகிதத்தைக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறியிருந்தது. இதையொட்டியே அனைத்து மாநிலங்களும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு 2 நாட்களில் வருகிறது சர்ப்ரைஸ்!

தமிழ்நாடு அரசு வெளியிட்ட மதிப்பெண் கணக்கீட்டு முறை கீழ்கண்டவாறு:

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி)- 50%

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்)- 20%

12ஆம் வகுப்பு செய்மறைத் தேர்வு அல்லது இன்டர்னல் மதிப்பெண்கள்- 30 %

இந்த மூன்றை கொண்டும் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இன்னும் ஓரிரு தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறவிருப்பதால் அதற்கு முன்பாக தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்திருக்கிறது.