தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்தா?- முதல்வர் நாளை ஆலோசனை

 

தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்தா?- முதல்வர் நாளை ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்தா?- முதல்வர் நாளை ஆலோசனை

இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் , அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ,ஆணையர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்கவிருக்கின்றனர்.