திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்

 

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி  சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்

திருச்சி மக்களின் பாரம்பரிய சந்தையாக செயல்பட்டுவரும் காந்தி மார்க்கெட்டில் திருச்சி மட்டுமில்லாமல் அருகில் உள்ள பல மாவட்ட மக்களும், விவசாயிகளும் விளைப் பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்துவருகின்றனர். சுமார் 500 கமிஷன் மண்டிகளும், 2500 சில்லரை கடைகளும் உள்ளன. தினமும் பல ஆயிரம் பேர் வந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். இதை நம்பி 3000 வியாபாரிகளும், 5000 தொழிலாளர் குடும்பங்களும் உள்ளன.

மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் ஐந்து மாத காலமாக மூடப்பட்ட காந்தி மார்க்கெட் திறக்கப்படவில்லை. ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரத்தின்போது மழை மற்றும் வெயில் காலங்களில், காய்கறிகள் வீணாவதுடன், வியாபாரிகள் மற்றும் சுமைப்பணி தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதுடன் நோய்த் தொற்றுக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் பலரும் பயனடையும் வகையில் ஓய்வறை ஏற்படுத்திட வேண்டும்.

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி  சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்

கொரோனா பரவலுக்கு வழிவகுத்ததாக கூறப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க தற்போது அரசு முனைந்துள்ள வேலையில், காந்தி மார்க்கெட்டை உடனடியாக திறந்து வணிகம் செய்யவும், வியாபாரிகள் மற்றும் சுமைப்பணி தொழிலாளர் நலனை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு முன்வர வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்றைய தினம் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, போக்குவரத்து நெரிசல் என்ற காரணத்தை கூறாமல் காந்தி மார்க்கெட் சந்தையினை விரைவாக திறந்து அனைவரது வாழ்வாதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துக் கொண்டனர்.