1+24+80+57+33+31+8=234 :வெற்றி வித்தி்யாச கணக்கு!

1+24+80+57+33+31+8=234 :வெற்றி வித்தி்யாச கணக்கு!

நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் தான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

1+24+80+57+33+31+8=234 :வெற்றி வித்தி்யாச கணக்கு!

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருந்த சமயத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிச்சாமி தான், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார் என்ற தகவல் பரவியது. இதன்பின்னர் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ வேலு தான் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற செய்தி பரவியது.

1+24+80+57+33+31+8=234 :வெற்றி வித்தி்யாச கணக்கு!

ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஒரே ஒரு வேட்பாளர்தான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. அவர் எடப்பாடி பழனிச்சாமியும் அல்ல, எ.வ.வேலுவும் அல்ல. அவர் திமுக வேட்பாளர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி.

1+24+80+57+33+31+8=234 :வெற்றி வித்தி்யாச கணக்கு!

மேலும், இத்தேர்தலில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் 24 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 80 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 57 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

1+24+80+57+33+31+8=234 :வெற்றி வித்தி்யாச கணக்கு!

ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 33 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 1000 முதல் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் 31 வேட்பாளர்களும் 100 முதல் 1000 வரை வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் 8 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.