“நீங்க பைக்ல பணம் வைப்பிங்களா ,கார்ல கேஷ் வைப்பிங்களா” -உஷார்! குடும்பமாக உங்களை உளவு பார்த்து ஆட்டைய போடும் கூட்டம்..

“நீங்க பைக்ல பணம் வைப்பிங்களா ,கார்ல கேஷ் வைப்பிங்களா” -உஷார்! குடும்பமாக உங்களை உளவு பார்த்து ஆட்டைய போடும் கூட்டம்..

ஒரு தாய் மற்றும் பாட்டி ஆகியோர் தங்களின் பிள்ளைகளுக்கு திருட சொல்லி ட்ரைனிங் கொடுத்து ,குடும்பத்தோடு சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் ,மற்றும் பைக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டத்தை போலீசார் கணடறிந்தனர் .

“நீங்க பைக்ல பணம் வைப்பிங்களா ,கார்ல கேஷ் வைப்பிங்களா” -உஷார்! குடும்பமாக உங்களை உளவு பார்த்து ஆட்டைய போடும் கூட்டம்..
ஜூலை 27 அன்று ஒரு சிறுமி தெற்கு டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து1,20,000 ரொக்கம் கொண்ட பையை திருடியதால் அந்த சிறுமியை போலீசார் கைது செய்தனர் .
அந்த சிறுமியை பிடித்து போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது .அந்த சிறுமியை அவரின் அம்மாவே திருட சொல்லியதும் ,திருடிய பணத்தையெல்லாம் அவரின் பாட்டியிடம் கொண்டு வந்து கொடுத்ததையும் சிறுமி ஒப்புதல் வாக்குமூலம் போலீசில் கொடுத்தார் .
பிறகு போலிசார் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டதில் அந்த பாட்டியிடமிருந்து 1லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றனர் .பிறகு சிறுமியை திருட தூண்டிய அவரின் அம்மாவை தேடியபோது அவர் தப்பித்து ஓடிய விவரம் தெரிந்து ,போலீசார் அவரை தேடி வருகின்றனர்

மேலும் விசாரணையின் போது, ​​அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அப்போது மேலும் பல சிறார்கள் பணம் திருடுவதை கண்டனர் . திங்களன்று, போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மேலும் பல சிறுவர்களை கைது செய்ததில் அவர்களிடமிருந்து 5,000ரூபாய் மீட்கப்பட்டது.அந்த பகுதியில் உள்ள இந்த திருட்டு வேலையை செய்த சிறுவனின் தந்தை உத்திரபிரதேச சிறையில் இருக்கிறார்.

“நீங்க பைக்ல பணம் வைப்பிங்களா ,கார்ல கேஷ் வைப்பிங்களா” -உஷார்! குடும்பமாக உங்களை உளவு பார்த்து ஆட்டைய போடும் கூட்டம்..