12 நாட்கள் மீண்டும் ஊரடங்கு – நியூசிலாந்து அதிரடி

 

12 நாட்கள் மீண்டும் ஊரடங்கு – நியூசிலாந்து அதிரடி

கொரோனா நோய்த் தொற்று கடந்த 9 மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளே அதைச் சமாளிக்க திணறுகின்றன.

நியூசிலாந்து நாட்டைப் பொறுத்தவரை நோய்த் தொற்று பரவத் தொடங்கிய உடனே எச்சரிக்கையாகி விட்டது. லாக்டெளன், ட்ரேசிங்க், தனிமைப்படுத்தல், சிகிச்சை என நோயைக் கட்டுக்குள் வைத்திருந்தது.

12 நாட்கள் மீண்டும் ஊரடங்கு – நியூசிலாந்து அதிரடி

உலகளவில் கொரோனாவை சரியாக எதிர்கொண்ட நாடுகளில் நியூசிலாந்து நாட்டையும் பலரும் குறிப்பிட்டார்கள். அது உண்மைதான் என்பதாகவே கொரோனாவை திறமையுடன் எதிர்த்து வந்தார் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா.

கடந்த 100 நாட்களாக புதிய நோயாளிகள் இல்லை என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தது. ஆனால், அடுத்த இரண்டு நாளில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

ஆக்லாந்து நகரைச் சேர்ந்த அவருக்கு மட்டும் அல்லாது, அவரின் குடும்பத்திற்கே கோவிட் 19 தொற்று இருந்திருக்கிறது. அது தற்போது இன்னும் பரவி 29 பேராக அதிகரித்து உள்ளது.

12 நாட்கள் மீண்டும் ஊரடங்கு – நியூசிலாந்து அதிரடி

இன்றைய தேதியில் அந்நாட்டின் கொரோனாவினால் மொத்த பாதிப்பு 1609 பேர். இதில் சிகிச்சையில் குணம் அடைந்தவர்கல் 1531 பேர். இறந்தவர்கள் 22 பேர்.

இதனால், நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா 12 நாட்களுக்கு ஊரடங்கு அறிவித்துள்ளார். இந்த நாட்களில் மிக அவசியமான தேவைகளைத் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நியூசிலாந்தில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.